நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

Tamilisai soundarajan says about Thoothudi Floods

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக … Read more

என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள்… சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!

appavu

நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, இடைத்தரகர்கள் மூலம் குறிப்பிட்ட தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டியுள்ளனர். என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள், செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதுவும், அரசியவாதி, தொழிலாலதிபர்களை குறிவைத்து மிரட்டல் விடுகிறார்கள்.  … Read more

40 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்.! அப்பாவு கொடுத்த ஷாக்.! நிதானித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

TN Assembly speaker Appavu says about Tamilnadu CM MK Stalin

இன்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்தவை என பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களோபரமானது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுக ஆதரவை பின் வாங்கினர். அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். நெருங்கும் … Read more

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

TN Secretary office go

கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக … Read more

சபாநாயகர் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை – எஸ்.பி வேலுமணி

spvelumani

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகரை அதிமுக எம்எல்ஏக்கள், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்த … Read more

அக்.11 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு

appavu

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்ட தொடரில்,  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக … Read more

‘நான் பொதுவான ஆள்’ – இந்த கேள்வியை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் – சபாநாயகர் அப்பாவு

appavu

நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. என்மீது அதிமுக மட்டுமல்ல பல கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. நான் எனது பாதையில் … Read more

#Breaking : ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு … Read more

அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் துவக்கிவைத்தனர். இதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்றும் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்றும் … Read more

முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்துள்ளார் – ஈபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார் என ஈபிஎஸ் குற்றசாட்டு.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் … Read more