‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

tn health

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் … Read more

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு … Read more

புதியவகை கொரோனா பரவல் – அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு … Read more

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் … Read more

100 சதவீத சுகப்பிரசவ இலக்கை நோக்கி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.! – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட … Read more

அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், … Read more

தமிழகத்தில் இன்ஃபுளூவென்சா காய்ச்சல்.! முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை.!

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை அனுப்பியுள்ளார்.   தமிழகத்தில் தற்போது இன்ஃபுளூவென்சா காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள இந்த நேரத்தில் தான் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் சற்று தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை … Read more

குடிநீரில் கழிவுநீர்.! 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தீவிர சிகிச்சை.!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு … Read more

பொதுத்தேர்வு – இவர்களுக்கு மாஸ்க் கட்டாயமில்லை : சுகாதாரத்துறை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு.  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு- சுகாதாரத்துறை..!

தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனை கட்டணம் குறைப்பு:  அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக … Read more