புதியவகை கொரோனா பரவல் – அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு … Read more

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநில தமிழ்நாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்.  அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி  வைத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் … Read more

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த லிஃப்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் மூன்றாவது மாடியில் இருந்து வந்துள்ளனர். எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதனையடுத்து முதல் தளத்தில் வந்து நின்ற லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைவரையும் வெளியேற்றினார். இந்த நிகழ்வு … Read more

வீராங்கனை பிரியா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.! டிடிவி தினகரன் கருத்து.!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன்.  அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த … Read more

வீராங்கனை பிரியா மரணம்.! மருத்துவர்கள் தலைமறைவு.! 3 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை….

பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில்,  பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் … Read more

வீராங்கனை பிரியா மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.!

பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர்  மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். … Read more

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறை – சீமான்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் … Read more

மருந்து தட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை…!

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருந்து தட்டுப்பாடு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. எங்கு மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 … Read more

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான்

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் … Read more

அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் ஏற்க தகுந்ததல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார … Read more