சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

By

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி.

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து வந்த 2 பேருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023