அதிமுக கொடி தான்…  எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..! ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி.! 

Edappadi Palanisamy - O Panneerselvam - Pugazhendhi

அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை. ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் … Read more

பிரதமரின் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி..! – ஈபிஎஸ்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார்.  இந்தியா இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்த உள்ளது. இந்த மாநாட்டின் தலைமை பொறுப்பு இம்மாதம் டிசம்பர் 1, 2022 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30, 2023 வரையில் இந்தியா வசம் இருக்கும். இதனையடுத்து, மாநாடு விவரங்கள் பற்றி விவாதிக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் … Read more

ஓ அப்படியா நல்லாருக்கு… இபிஎஸ் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பான ரீப்ளே.!

திராவிட மாடல் ஆட்சி நாங்கள் கொண்டு வந்ததது என இபிஎஸ் கூறியது பற்றி பேசுகையில் சிரித்துக்கொண்டே ஓ அப்படியா நல்லாருக்கு என உதயநிதி சென்றுவிட்டார்.  இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது திராவிட … Read more

பேனர் ஊழல்.. இபிஎஸ் கூறுவது முற்றிலும் தவறானது.! அமைச்சர் பெரிய கருப்பன் விரிவான விளக்கம்.!

பேனர் அச்சிட ஒன்றுக்கு 611 ரூபாய் தான் செலவாகும். அச்சடிக்கும் செலவு , சரக்கு மாற்றும் சேவை வரி உட்பட  இதுதான் செலவு.  ரூபாய் 7,906 என்பது முற்றிலும் தவறான தகவல். – அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்.  கிராமப்புறங்களில் நம்ம ஊரு சூப்பரு எனும் திட்ட விளம்பர பலைகையில் ஊழல் நடைபெற்று இருந்ததாகவும், விளம்பர பலகைகாக மட்டுமே 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும்எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் … Read more

கள்ளக்குறிச்சி, போதைப்பொருள், டாஸ்மாக் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகள்.! ஆளுநரிடம் இபிஎஸ் கொடுத்த புகார் லிஸ்ட்….

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு அளித்திருந்தார்.    இன்று சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். தமிழக சட்டஒழுங்கு பற்றியும். ஆளும் அரசு மீதான புகாரையும் அந்த சந்திப்பின் போது எடுத்துரைத்ததாக இபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ கோவையில் சிலிண்டர் வெடித்தது மக்கள் கூடும் இடத்தில் வெடித்தால் இந்நேரம் பல உயிர்கள் பலியாகி … Read more

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40-ஐ ஜெயிக்கும்.! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியடையும். அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெரும் – முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே  ஓர் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ‘ஒவ்வொரு பூத்துகளிலும் ஆட்களை நியமிக்க வேண்டும். அதிமுக … Read more

கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு.! நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம்.!

கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் … Read more

மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை வழங்கிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்.!

ஆலந்தூர் தொகுதியில் கொளப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.  இன்று காலை முதல் முன்னாள் முதல்வரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முழுதாக மழைநீர் விடிந்துவிட்டது என திமுக பொய் கூறுகிறது என குற்றம் சாட்டினார். மேலும் புறநகர் பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க … Read more

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னையில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார்.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில இடஙக்ளில் … Read more

அரசாணை என் 115ஐ திரும்ப பெறுக.! – எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை. !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ நீக்க வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது, அரசு பணிகளில்,திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் … Read more