கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு.! நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம்.!

கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் … Read more

#Breaking:அதிர்ச்சி…நீரில் மூழ்கி 7 பேர் பலி – காப்பாற்ற முடியாதா? என கதறும் உறவினர்கள்!

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க  சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் … Read more

சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு ! அதிரடியாக 9 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த  9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து … Read more

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

கடலூரில்,ஜெயக்குமார் என்ற இளைஞர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தின் கூத்தாப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்ற இளைஞர் தனது 3 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.அதன் பின்பு,சிறு வயதிலிருந்தே சிறிய  கம்பிகளைக் கொண்டு தான் விரும்பிய வடிவத்தினை செய்து வந்தார். நாளடைவில் செம்பு கம்பியைக் கொண்டு கீ செயின்,டாலர்,பெயர்கள் போன்ற பல்வேறு பொருள்களை செய்து வந்தார்.இதனைத் தொடர்ந்து, தனது தீராத கலையின் … Read more

கடலூரில் வாலிபர் கழுத்தறுத்து கொலை..?

கடலூர் மாவட்டம் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புது நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி இவருக்கு காமராஜ் என்ற 22 வயது மகன் உள்ளார் இந்நிலையில் காமராஜ் இரவு கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கிற்கு பின்புறம் ரவி மற்றும் தேவா போன்ற 6 நண்பர்களுடன் சேர்ந்து காமராஜ் மது குடித்துள்ளார் அதற்குப்பிறகு தேவாவின் மோட்டார் சைக்கிளில் காமராஜ், மற்றும் தேவா இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் … Read more

இரட்டை ஆண்டு ஆயுள் தண்டனை… இரட்டை கொலை வழக்கு..!

இரட்டை கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் . கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கூலித்தொழி செய்துவந்தார், இவருடைய மகன்கள் சதீஸ்குமார் மற்றும் வினோத்குமார் சதீஸ் குமார் இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சதீஸ்குமார் மற்றும் வினோத்குமாரை 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது … Read more

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே! அலைமோதிய மக்கள் கூட்டம்!

கடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது.  கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.  வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் … Read more

கடலூர் : இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி மீது சக மாணவன் ஆசீட் வீச்சு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தான் சுசித்ரா. இந்த மாணவி மீது சக மாணவன் முத்தமிழ், ஆசீட் வீசி உள்ளான். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் முத்தமிழை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்தமிழ் மற்றும் அசீட் வீச்சிற்கு உள்ளான சுசித்ரா ஆகிய இருவரும் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து … Read more

கடலூரில் 9 பேருக்கு டெங்கு! 100 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர்களை மட்டும் தனியாக வைத்து அவர்களுக்கு மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதா அவர்கள், கூறுகையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்கள் … Read more