பேனர் ஊழல்.. இபிஎஸ் கூறுவது முற்றிலும் தவறானது.! அமைச்சர் பெரிய கருப்பன் விரிவான விளக்கம்.!

பேனர் அச்சிட ஒன்றுக்கு 611 ரூபாய் தான் செலவாகும். அச்சடிக்கும் செலவு , சரக்கு மாற்றும் சேவை வரி உட்பட  இதுதான் செலவு.  ரூபாய் 7,906 என்பது முற்றிலும் தவறான தகவல். – அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம். 

கிராமப்புறங்களில் நம்ம ஊரு சூப்பரு எனும் திட்ட விளம்பர பலைகையில் ஊழல் நடைபெற்று இருந்ததாகவும், விளம்பர பலகைகாக மட்டுமே 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும்எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இன்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கறுப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எந்த ஒரு தனிநபர் நிறுவனத்திற்கும் விளம்பர பதாகை அச்சடிக்க கொடுக்கவில்லை. மொத்தம் 89 நிறுவனங்கள் மூலம், 27 மாவட்டங்களில் அச்சடிக்கப்பட்ட்டன. அதில் 9 மாவட்டங்களில் ஊராட்சிகளின் மூலம் அச்சகங்கள் வாயிலாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான விளம்பர பேனர்கள் அச்சிடப்பட்டன.

6*4, 12*8, 10*8 என பல்வேறு வெவ்வேறு அளவுகளில் பேனர்கள் அச்சிடப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். பேனர் அச்சிட ஒன்றுக்கு 611 ரூபாய் தான் செலவாகும். அச்சடிக்கும் செலவு , சரக்கு மாற்றும் சேவை வரி உட்பட  இதுதான் செலவு.  ரூபாய் 7,906 என்பது முற்றிலும் தவறான தகவல்.

நம்ம ஊரு சூப்பரு எனும் திட்டம் மூலம் தமிழக கிராமங்கள் தூய்மை பணிகள் சிறப்பாக  நடைபெற்று 2022ஆம் ஆண்டு தேசிய அளவில் தமிழக கிராமங்கள் 3ஆம் இடம் பெற்று குடியரசு தலைவரால் பாராட்டு சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பிடுங்கியது யார் என மக்களுக்கு தெரியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை. அது மாநில அரசின் கீழ் இயங்கும் துறை. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் அதனை முறையாக நடத்தாமல் ஜனநாயக படுகொலை செய்தவர்கள் கடந்தகாலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.

அதிமுக குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்தவில்லை என மத்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி தரவில்லை.  முடிக்கப்பட்ட வேலைகளுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டதாக இபிஎஸ் புகார் கூறினார். ஆனால் அது தூய்மை விழிப்புணர்வு  பேனர்கள் தான் என அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் கொடுத்தார்.

மேலும், கடந்த ஆட்சி காலத்தில் கிராமபுற செயல்பாட்டிற்கு விளம்பர பலகைக்கு 2,800 ரூபாய் விளம்பர பலகைக்கு 25,000 எனவும்,  20 வாட்ஸ் எல்இடி பல்பு 500 ரூபாய்க்கு 5000 எனவும், 4500 ரூபாய் பல்பிற்கு 15,000 எனவும் போலி கணக்குகள் காட்டப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என அமைச்சர் பெரிய கருப்பன் குற்றம் சாட்டினார்.

Leave a Comment