கனமழை எதிரொலி!நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….

நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என  அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல்லையில் பலத்த காற்று காரணமாக நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு போகவில்லை…!!

நெல்லை : பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கூத்தென்குழி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டும் பணியில் தீவிரம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிறப்பு ரயில் இன்று தொடக்கம் !!!

தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் இன்று தொடக்கம் அந்தியோதயா சிறப்பு ரயில், தாம்பரம்- செங்கோட்டை இடையேயான  சேவையை  இன்று முதல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு, கடந்த நவம்பர் மாதம் வெளியான ரயில்வே கால அட்டவணையில்  சென்னைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இவ்விரு அந்தியோதயா ரயில்களும் முழுக்க முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. நெல்லை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு !!!

  மதுரை கோட்டம் சாா்பில் திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து கோடை கால சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை கால விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் சிறப்பு கட்டண ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு கட்டண ரயில்கள் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை இயக்கப்படுகின்றன. அதன்படி ஏப்ரல் 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு … Read more

தென்காசி கோவில் வளாகத்தில் தீ பற்றியது…!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில்  மீன்களை கடலில் கொட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதற்கு மேல் வரும் படகுகளை அதிகாரிகள் துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களால் மீன்களை இறக்கி விற்க முடியாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் … Read more

திருநெல்வேலி மளிகை கடையில் எலிக்கு கடிதம் எழுதிவைத்துள்ள கடை உரிமையாளர்…!!

திருநெல்வேலியில் வள்ளியப்பன் ஸ்டோர் என்கிற கடை உரிமையாளர் எலி தொல்லையை ஒழிக்க பல வழிகளிலும் போராடியும் ஒன்றுமே பலிக்கவில்லை . அதன் பிறகு இது போல மரியாதையுடன் வேண்டுகோளை ஒரு கடிதத்தில் எழுதி வைத்தபின்னர் எலி தொல்லை வெகுவாக குறைந்து விட்டது என்கிறார் அவர். அது ஒரு வேளை தமிழ் எழுத ,படிக்க தெரிந்த எலியா இருக்கும் போல….. நமக்குத்தான் தெரியலையோ…??

தென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.. source: dinasuvadu.com