தூத்துக்குடி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் கொடியேற்றம்…!!

  தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் … Read more

மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழா

தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் … Read more

தென்காசி கோவில் வளாகத்தில் தீ பற்றியது…!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் … Read more

இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது…!!

இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அவைகள் எதுவும் உண்மையில்லை என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக … Read more

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்…!!

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிசேகத்தின் போது கிடைத்த பழைமையான நாணயங்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.  

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திர சுவாமி-விளக்கம் அளித்துள்ள சங்கரா மடம்

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க … Read more

ஆண்டாள் குறித்த சர்ச்சைக்கு -தமிழ் அமுது கவிஞர் வைரமுத்து உருக்கமும் விளக்கமும்

ஆண்டாளை பற்றி அவதூறாக பேசியதற்காக வைரமுத்துவை அனைவரும் விமர்சித்துள்ளனர். இதனால் பல்வேறு பிரெச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். இதனை குறித்து அவர் அண்மையில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மிகவும் மனம் வருத்தத்தில் இருப்பதாகவும் இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், “ஆண்டாளை தேவதாசி என உயர்வாக சொன்னதை தாசி, வேசி என மதம் கலந்த அரசியலுக்காக திரித்துவிட்டனர்; வருத்தம் தெரிவித்த பின்னரும் இன, மத கலவரத்துக்காக திரிகிறார்கள்” என கவிஞர் வைரமுத்து உருக்கமாக விளக்கம் தந்துள்ளார். ஆண்டாளை பற்றி … Read more

தூத்துக்குடி ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு…!!

தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.