பேரறிவாளன்,சாந்தன்,நளினி விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினி,சாந்தன், முருகன், பேரறிவாளன், மற்றும் பத்தாண்டுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் 70வது சுதந்திரத்தை முன்னிட்டும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை ஜவகர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமஜக சார்பில் தாமஸ், ஜமால், சாந்தி ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை

நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலி, மேலச்செவலை சேர்ந்த சண்முகவேல் மகன் சுந்தரராஜ் 36.தற்போது ரெட்டியார்பட்டியில் மனைவி கல்யாணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.நாட்டு வைத்திய தொழிலில் ஈடுபட்டு வந்தார்.செய்வினை நீக்குவது, மாந்திரீக வேலைகளிலும்ஈடுபட்டுவந்தாராம். இவர் வசித்த பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இருவர் இறந்துள்ளனர்.அவர்களது இறப்பிற்கு சுந்தரராஜின் செய்வினைதான் காரணம் என சந்தேகப்பட்டனர். அவரை அந்த வீட்டில்இருந்து காலி செய்யுமாறு சிலர் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் ரெட்டியார்பட்டியில்இருந்து நான்குவழிச்சாலைக்கு செல்லும் பாதையில் கத்தியால் குத்தி … Read more

தமிழர் உரிமை மாநாடு:நெல்லையில் ஆக.,19ல் நடக்கிறது

நெல்லையில் தென்மண்டல தமிழர் உரிமை மாநாடு வரும் ஆக.,19ல் நடக்கிறது.மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் மொழி உரிமைகளை நிலைநாட்டிட கோரியும்நெல்லையில் தமிழர் உரிமை மாநாடு நெல்லையில் ஆகஸ்ட் 19ல் ஜவஹர் திடலில் நடக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சசார்பில் நடக்கிறது.கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை முறையாக நடத்தி தொன்மையை வெளிக்கொணர … Read more