நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை

நெல்லையில் மாந்திரீகவாதி குத்திக்கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலி, மேலச்செவலை சேர்ந்த சண்முகவேல் மகன் சுந்தரராஜ் 36.தற்போது ரெட்டியார்பட்டியில் மனைவி கல்யாணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.நாட்டு வைத்திய தொழிலில் ஈடுபட்டு வந்தார்.செய்வினை நீக்குவது, மாந்திரீக வேலைகளிலும்ஈடுபட்டுவந்தாராம். இவர் வசித்த பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இருவர் இறந்துள்ளனர்.அவர்களது இறப்பிற்கு சுந்தரராஜின் செய்வினைதான் காரணம் என சந்தேகப்பட்டனர். அவரை அந்த வீட்டில்இருந்து காலி செய்யுமாறு சிலர் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் ரெட்டியார்பட்டியில்இருந்து நான்குவழிச்சாலைக்கு செல்லும் பாதையில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுகிடந்தார். மாந்திரீக தொழிலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தார்களா, வேறு காரணம்உள்ளதா என்பது குறித்து பெருமாள்புரம்போலீசார் விசாரித்தனர்

Leave a Comment