நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jun 15, 2023 - 07:03
 0  0
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு இரண்டு மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

சென்னையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களை அலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அதன்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு இரண்டு மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விளக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்த அவர், செந்தில் பாலாஜியை மருத்துவமனை மாற்றுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, செந்திலம்பலாஜிக்கு அடைப்பு இருப்பதால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்பது அது தனிமனித விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow