மொபைல் தொலைந்துவிட்டதா? இனிமேல் கவலை வேண்டாம்... புதிய வசதியை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.!!

May 16, 2023 - 06:35
 0  1

பொதுவாக ஒருவரின் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ அதனை கண்டு பிடிப்பது எளிதான விஷயம் இல்லை.  ஏனென்றால், தொலைந்து போன அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனிமேல் நம்முடைய போன் தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம், ஏனெனில், போனை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய தொழில்நுட்பத்தை இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த வாரம் அரசாங்கத்தால் ஒரு கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் இந்தியா முழுவதும் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத்  கண்காணிக்கவும் முடியும் என கூறப்படுகிறது.

மத்திய டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) மத்திய உபகரண அடையாள பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின்  போன் காணாமல் போய்விட்டது என்றால், அந்த போன்களின் 15 இலக்க தனித்துவ அடையாள ‘‘ஐஎம்இஐ’’ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது என்ற அதனுடைய இருப்பிடத்தை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதைப்போல, அதனை  பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.

மேலும், இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு "சஞ்சார் சாத்தி"  ( Sanchar Sathi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை  மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow