தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது - அண்ணாமலை

Nov 10, 2023 - 08:01
 0  0
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது - அண்ணாமலை

சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில்  மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

இது தொடர்பாக அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த கண்டன பதிவில், சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது.

போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு.' என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow