பரோலில் வரும் கைதி...'சைரன்' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ...!!

Feb 16, 2024 - 07:46
 0  1
பரோலில் வரும் கைதி...'சைரன்' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ...!!

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசையமைத்து கொடுத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் முழு விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

திரைவிமர்சனம் 

படத்தின் கதை 

சைரன் படத்தின் கதை படி,  ஜெயம் ரவி (திலகன)  என்ற கதாபாத்திரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நடித்திருக்கிறார். தனது மனைவி  மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வரும் அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு  கொலை வழக்கு வருகிறது. செய்யாத குற்றத்திற்காக திலகன் ஆயுள் தண்டனைக் கைதியாக 14 வருடங்கள் ஜெயிலில் இருக்கிறார்.

அதன்பிறகு 14-ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவி 14 நாட்கள் மட்டும் பரோலில் தனது குடும்பத்தை பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்ததை நினைத்து அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட பள்ளிக்கூடம் செல்லும் அவருடைய மகள் தனது அப்பா கொலைகாரன் என தவறாக நினைத்துக்கொண்டு அவருடைய முகத்தை கூட பார்க்க  மறுக்கிறது. இதனால் ஜெயம் ரவி மனவேதனையும் அடைகிறார்.

செய்யாத குற்றத்திற்காக 14-ஆண்டுகள் சிறையில் இருக்கிறோம் என்ற கோபத்தோடு இதற்கு காரணமானவர்களை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமும் ஜெயம் ரவிக்கு இருக்கிறது. இந்த 14-நாட்களில் அவர்களை பழி வாங்கியே ஆகவேண்டும் என்ற முயற்சிகளையும் அவர் செய்கிறார். பரோலில் இருந்து ஜெயம் ரவி வந்த காரணத்தால் அவரை கண்காணிக்க போலீஸ் அதிகாரியாக யோகி பாபு படத்தில்  வருகிறார்.

ஜெயம் ரவி பரோலில் வெளிய வந்த சமயத்தில் தான் அந்த பகுதியில் 2 கொலைகளும் நடந்துள்ளது. எனவே, ஜெயம் ரவி தான் ஒரு வேலை இதனை செய்கிறாரோ  என காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும்  கீர்த்தி சுரேஷ் சந்தேக படுகிறார். அவரிடம் விசாரணையையும் நடத்தி இருக்கிறார். பிறகு கீர்த்தி சுரேஷ்  ஜெயம் ரவி போக்குகளை கண்காணித்து வருகிறார். பின் கடைசியில் கீர்த்தி சுரேஷை மீறி ஜெயம் ரவி தனது தவறான குற்றச்சாட்டுகளுக்கு காரணமானவர்களை பழி வாங்கினாரா? அல்லது உண்மையான குற்றவாளி யார் என்பதை கீர்த்தி சுரேஷ் கண்டுபிடித்தாரா என்பது தான் படத்தின் கதை.

பாசிட்டிவ் 

படத்தின் பாசிட்டிவ் என்னவென்றால் ஜெயம் ரவி என்றே கூறலாம். ஏனென்றால், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்கவேண்டுமோ அதற்கு ஏற்றது போல எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  கதை சற்று வித்தியாசமாக இருப்பதாலும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் கொடுத்திருக்கிறார்.

Lover Review: காதலில் வென்றாரா மணிகண்டன்.? “லவ்வர்” விமர்சனம் இதோ!

அதைப்போல படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் அவருடைய நகைச்சுவை படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் காட்சியும் படத்தின் பெரிய பாசிட்டிவாக அமைந்துள்ளது.

நெகட்டிவ் 

நெகட்டிவ் என்று பார்த்தால் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்று கூறலாம். ஜிவி பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்து இருக்கிறார். பெரிதாக பாடல்கள் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. அதைப்போல பின்னணி இசையை சாம்.சி.எஸ் கொடுத்து இருக்கிறார். அவருடைய பின்னணி இசையையும் பெரிதாக மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

லால் சலாம் திரைப்படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

அதைப்போல கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு அவர் செட் ஆகவில்லை என்றே சொல்லலாம். மற்றோன்று பிளாஸ் பேக் காட்சியில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் அனுபமா கதாபாத்திரம். கதாபாத்திரம் ஓரளவுக்கு இருந்தாலும் கூட ஜெயம் ரவிக்கும் அவருக்கு ஜோடி சரியாக செட் ஆகவில்லை என்பதே மக்கள் கருது.  இந்த நெகட்டிவ்களை தவிர்த்து படம் மற்றப்படி அருமையான படம் தான். குடும்பத்துடன் தாராளமாக சென்று படத்தை பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow