Leo In Rohini: மீண்டும் புதுப்பொலிவுடன் ரோகிணி திரையரங்கம்…நாளை லியோ வெளியீடு!

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கு மீண்டும் தயாராகி உள்ளது என்றும், நாளை லியோ திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது.

‘லியோ படம் இங்கு திரையிடப்படாது’ என்ற பதாகையை திரையரங்கு வாசலில் வைத்து ஷாக் கொடுத்த ரோகிணி திரையரங்கம் இப்பொது, புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளதாக ட்வீட் செய்து டிவிஸ்ட் செய்துள்ளது. அதன்படி, லியோ ட்ரைலர் வெளியீட்டின் போது, உடைக்கப்பட்ட இருக்கைகைகளை சரி செய்து,  ‘Agreement signed’ என்று வீடியோவை வெளியிட்டு நாளை லியோ படத்தை வெளியிட இருப்பதாக ரோகிணி திரையரங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரோகிணி தியேட்டர்

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரு படம் வெளியானால் அந்த படத்தை பார்க்க செல்லும் திரையரங்கு ரோஹிணி தான். ஏனென்றால், ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்க்கவேண்டும் என்றால் இந்த திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்காக இரவே சென்று கூட்டமாக திரையரங்கு வாசலிலில் நடனம் ஆடி ஸ்பீக்கர்கள் வைத்து கொண்டாடுவார்கள்.

லியோ திரையிடப்படாது

பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி ஒளிபரப்பும் ரோஹிணி தியேட்டர் இன்று காலை இந்த முறை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

கரணம் 

இந்த திரையரங்கில் லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின போது, படத்தின் ட்ரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கில் அமைந்திருந்த இருக்கைகள் அனைத்தையும் உடைத்து சேத படுத்தினார்கள்.
இதனால், ரோகிணி திரையரங்கம் லியோ படத்தை வெளியிடாமல் இருக்கலாம் என கூறப்பட்டது. மறுபக்கம், திரையரங்கு

சுமூக முடிவு

லியோ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனத்திடம் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையின் முக்கிய திரையரங்குகளான ரோகிணி, வெற்றி, தேவி திரையரங்குகளில் லியோ திரையிடுவதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

இனிமே ட்ரைலர் கிடையாது

இதற்கிடையில், திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.