மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு - பட்ஜெட்டில் அறிவிப்பு

Mar 20, 2023 - 05:35
 0  0

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசின் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow