புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா..! ஆம் ஆத்மி, டிஎம்சியைத் தொடர்ந்து ஆர்ஜேடி புறக்கணிப்பு..!

May 24, 2023 - 05:20
 0  1

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) புறக்கணிக்க முடிவு.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் அல்ல, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிபிஐக்கு பிறகு, இப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மே 28 அன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

முன்னதாக, டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow