EdappadiPalaniswami: இதன்மூலம் வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது - இபிஎஸ்

Sep 16, 2023 - 05:55
 0  1
EdappadiPalaniswami: இதன்மூலம் வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது - இபிஎஸ்

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் ஆன நிலையில் காலம் தாழ்த்தி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் வாக்குகளை பெறவே இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. பாதிக்கும் குறைவான மகளிருக்கு உரிமைத்தொகையை வழங்குவது ஏமாற்று வேலை.

யாராலும் ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்து தாய்மார்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது. குறிப்பிட்ட மகளிருக்கு 1000 ரூபாய் கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றுள்ளார்.

இதனிடையே, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த  நல்ல வரவேற்பு இருந்தாலும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை திமுக அரசு விதித்துள்ளது. அதுவும், இந்த தொகை திமுகக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது குறிப்பிட்ட மகளிர்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பிட்ட மகளிருக்கு 1000 ரூபாய் கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow