Cash On Delivery: ரூ.2000 நோட்டு கொடுத்து உணவு வாங்கும் மக்கள்.!

May 24, 2023 - 06:16
 0  1

ஆன்லைன் உணவு டெலிவரியின்போது 72% வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளையே தருகின்றனர் என சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி, ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் ரூ.2000 வாங்க கடை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால்,  ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறுவதாக RBI அறிவித்த பின்னர், ஆன்லைன் டெலிவரியில் ரூ.2000 நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.  மேலும், இதை சோமேட்டோ நிறுவனம் விளம்பர யுக்தியாக பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2000 நோட்டுகளை பெற்றுக்கொள்கிறது.

உணவு டெலிவரியின்போது 'Cash On Delivery' வசதியை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களில், 72% பேர் ரூ,2000 நோட்டுகளை தருகிறார்கள் என சொமேட்டோ நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow