இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்!

May 16, 2023 - 05:02
 0  1

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தற்போது இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்பாடுகளில் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த பணிநீக்கங்கள் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR உட்பட பல்வேறு துறைகளில் பணியாளர்களை குறைத்து வருகிறது.

இந்த நிலையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் உலகளாவிய பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக உள்ளன, இது 9,000 ஊழியர்களை பாதித்துள்ளது.

கொச்சி மற்றும் லக்னோ போன்ற 2 நகரங்களில் விற்பனையாளர் ஆன்போர்டிங் செயல்பாடுகளையும், அதன் விற்பனையாளர் ஆதரவு செயல்பாடு, அமேசான் டிஜிட்டல் கேந்திராவையும் மூடியுள்ளது அமேசான் நிறுவனம். மார்ச் மாதத்தில், அமேசான் தனது 2வது சுற்று பணி நீக்கங்களை அறிவித்தது. இதில் 9,000 வேலைகள் குறைக்கப்பட்டன. Amazon Web Services (AWS), Twitch, advertising, HR ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பகுதியாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow