சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து!பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை   மண்ணடியில்  பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது.இன்று காலை அங்கு தீ விபத்து ஏற்பட்டது.இந்த அலுவலகத்தில் உள்ள நான்கு தளங்களிலும் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.மேலும்  இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தீவிபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள திருவெற்றியூர்,துறைமுகம் மற்றும் பூக்கடை பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிமுருகன், சீமராஜாவை தொடர்ந்து பொன்ராம் அடுத்து யாரை இயக்க உள்ளார்?! முக்கிய தகவல்கள் இதோ!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார் என எதிர்பார்த்த நிலையில், விஜய் சேதுபதியிடம் கதை கூறியுள்ளார். ஆனால் அவர் பிசியாக இருப்பதாக கூறியதால், தற்போது சசிகுமாரை நாயகனாக வைத்து கிராமத்து பின்னனியில் ஒரு கதை எழுதியுள்ளாராம். அந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி ஆவின் பால் கவர்களுக்கு காசு!ஆவின் பால் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. … Read more

இன்று கூடுகிறது புதிய கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கூட்டம் – திமுக தோழமை காட்சிகள் பங்கேற்கிறது

இன்று நாடாளுமன்றத்தில் கூடும் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்கிறது. புதிய கல்வி கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட்  9 ம் தேதி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 3 வது எதிர்க்கட்சியாக இருக்கும் … Read more

ராகுல் காந்தி-னு பெயர் வைத்தது தவறா? இளைஞருக்கு நேரிட்ட சிக்கல்!

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி. இவருக்கு வயது 22. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் தலைவரின் பெயரான ‘ராகுல் காந்தி’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இந்த பெயரால் அவருக்கு ஏற்படுகிற சிக்கல்களை குறித்து விவரித்து கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராகுல் காந்தி என்ற பெயரில் ஆதார் அட்டை வாங்கியுள்ளேன். மொபைல் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, அல்லது மற்ற பணிகளுக்காகவோ எனது ஆதார் அட்டை நகலை கொடுத்தால், … Read more

சென்னையில் விரைவில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்-அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னையில் விரைவில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். சென்னையில் ஆயிரம் அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் ஏற்பட்ட விபத்து எதிர்பாராதது என்று தெரிவித்தார். பணிமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கியுள்ளார். மேலும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிமூலமும் மேம்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

மீண்டும் மெகா ஸ்டாருக்கு ஜோடியான நயன்தாரா! விஸ்வாசம் ரீமேக்தானா?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு,  கைதி நம்பர் 150 ( கத்தி ரீமேக் ) எனும் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.   இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா … Read more

இன்றைய (ஆகஸ்ட் 01) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து உள்ளது. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.75.60 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு ரூ.69.71 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

இந்த படத்திற்கும் கதை திருட்டு சிக்கலா?! குழப்பத்தில் கோமாளி படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை தன்னுடையடது என பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோமாளி பட இயக்குனர், ‘ இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. கதையை நான் ஏற்கனவே சங்கத்தில் பதிவு செய்து … Read more

தலைமை பயிற்சியாளர் யார் வரலாம் என கூற கோலிக்கு உரிமை உள்ளது : கங்குலி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பல்வேறு பதவிக்கு தேர்வு இம்மாதம் நடைப்பெற உள்ளது.இந்த பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் உடன் முடிவடைந்து உள்ளது. தேர்வு செய்யும் குழுவில் கபில் தேவ் ,அன்ஷுமன் கெயிவாட் ,சாந்தா ரங்கசாமி  உள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் நேர்காணலில் நடைபெற உள்ளது. தலைமை பதவிக்கு டாம் மூடி , மைக் ஹெசன் ,ஜெயவர்த்தனே  உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் , … Read more