பிசிசிஐ விருதுகள்: ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

Ravi Shastri

பிசிசிஐ விருதுகள் 2024 விழா ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு  பிசிசிஐ  வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது விழாவில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல  ஃபாரூக் என்ஜினீயருக்கு  கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற அஷ்வின், சுப்மான் கில் ,பும்ரா ..! 2019-20க்கான சிறந்த வீராங்கனையாக விருதை … Read more

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு… ரவி சாஸ்திரி ராஜினாமா? – தகவல்..

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. ஐசிசி நிகழ்வுக்குப் பிறகு அவரது ஒப்பந்தம் காலாவதியாகிறது, பிசிசிஐ வட்டாரங்களின்படி, அவர் அதை புதுப்பிக்க விரும்பாததாக கூறப்படுகிறது. இந்த முடிவை சாஸ்திரி ஏற்கனவே பிசிசிஐ உயரதிகாரிகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார். … Read more

ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ரவி சாஸ்திரியுடன் தொடர்பிலிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, … Read more

“ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடருவார்” – ஆகாஷ் சோப்ரா விருப்பம்..!

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடருவார் என்று ஆகாஷ் சோப்ரா விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்க வேண்டும் என பலர் விரும்பினார்கள்.தற்போது ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற பிறகு, அந்தக் குரல்கள் வலுவடைந்துள்ளன.ஏனெனில்,அவர் வீரர்களுடன் நல்ல உறவைக் கொண்டவர் மற்றும் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுடனும் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில்,இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, டிராவிட் நிச்சயமாக … Read more

வீரர்களிடம் கேப்டன் கோலி எதிர்பார்ப்பது இதுதான்.. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

இதர வீரர்களிடம் விராட் கோலி, பிட்னஸ், உடற்பயிற்சி, சிறப்பான பீல்டிங் உள்ளிட்ட பலவற்றை விராட் கோலி எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அனைத்து தலைமை பயிற்சியாளர்களைவிட ரவி சாஸ்திரி, மிக சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்றுவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியதால், உலக … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர் தோனி.! ரவி சாஸ்திரி புகழாரம்.!

தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. – தோனி குறித்து பல்வேறு கருத்துக்களை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் … Read more

தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த இந்திய அணி பயிற்சியாளர்.!

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இதில் முதல் டி20 ஆக்லாந்து மைதானத்தில் … Read more

விராட் கோலியின் கனவு பலித்தது !மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்ப கால அவகாசம் கடந்த 30-ம் தேதி முடிந்தது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் டாம் மூடி , மைக் ஹெஸன் ,கேரி கிர்ஸ்டன் ,ஜெயவர்த்தனே ,ராபின் சிங் … Read more

தலைமை பயிற்சியாளர் யார் வரலாம் என கூற கோலிக்கு உரிமை உள்ளது : கங்குலி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பல்வேறு பதவிக்கு தேர்வு இம்மாதம் நடைப்பெற உள்ளது.இந்த பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் உடன் முடிவடைந்து உள்ளது. தேர்வு செய்யும் குழுவில் கபில் தேவ் ,அன்ஷுமன் கெயிவாட் ,சாந்தா ரங்கசாமி  உள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் நேர்காணலில் நடைபெற உள்ளது. தலைமை பதவிக்கு டாம் மூடி , மைக் ஹெசன் ,ஜெயவர்த்தனே  உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் , … Read more

மீண்டும் இந்திய அணியில் ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி உள்ளார்.பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் , பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீ தார் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்து உள்ளது.இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் தொடருக்காக இவர்களின்  பதவி காலம் 45 நாள்கள் அதிகரித்து உள்ளது. தலைமை பயிற்சியாளராக இருக்கும்  ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு … Read more