இனி அடுத்த கைது காங்கிரஸ்சில் உறுதி !சவால்விடும் சுப்பிரமணியன் சாமி……

சுப்பிரமணியசாமி  கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்ந்து அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறிய சுப்பிரமணியன் சாமி, சி.பி.ஐ. பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தபோதும், அவர் தொடர்ந்து பொய்களையே பேசி வந்ததாக குற்றம்சாட்டினார். கார்த்தி சிதம்பரம் நிச்சயம் சிறைக்கு செல்ல வேண்டியவர்தான் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தின் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தது அவரது தந்தையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று தெரிவித்த … Read more

மேலும் புதிய வடிவில் தாயாராகும் பிரான்ஸ் டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு பூங்கா!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள  டிஸ்னிலாண்ட்(Disneyland) பொழுது போக்கு பூங்காவில் வால்ட் டிஸ்னி (Walt Disney) நிறுவனம் மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் உடனான சந்திப்புக்குப் பின் வால்ட் டிஸ்னி நிறுவன தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகேர் (Robert Iger) இந்த முடிவை அறிவித்தார். ஏற்கெனவே பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ள இந்த பூங்காவில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களான ஸ்பைடர் … Read more

வைகோ வேண்டுகோள்! செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்…

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று  கேட்டுக் கொண்டுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறு குழந்தைகள் கூட செல்போனை பார்த்து பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களை இழைப்பதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிரியாவிற்கு உதவிய வடகொரியா? ரசாயண ஆயுதங்களை தயாரிக்க உதவியது அம்பலம் …..

சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போதும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிரியாவில் சிறார்கள் போரில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிரிய ராணுவம் விஷவாயு தாக்குதலை அவ்வபோது முன்னெடுத்து வருகிறது. … Read more

நிலவில் 4ஜி வழங்கவா?5ஜி வழங்கவா?நிலவை குறிவைக்கும் வோடஃபோன் நிறுவனம்…..

வோடஃபோன் நிறுவனம்  அடுத்த ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது. அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், ஹெச்டிNIL (HD) தரத்திலான வீடியோவையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை … Read more

ஆளும் அரசே சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது!சொந்த மக்களையே சிதைக்கும் சிரியா …..

ஒரு மாதம் போர் நிறுத்த தீர்மானம் போடப்பட்ட சில மணி நேரத்தில் சிரியாவில் , ஆளும் அரசே அதனை மீறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) பகுதியில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன் அரசுப் படைகள் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் நடைபெற்று வரும் சண்டை 8வது ஆண்டை நெருங்கும் … Read more

சீனாவை பின்னுக்குத்தள்ள தயாராகும் இந்தியா?சாத்தியமாகுமா ?

சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில்  அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை நீங்கி வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும் மூன்றாவது காலாண்டில் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையான காலாண்டில் … Read more

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  என்றாலே சர்ச்சைக்கு பெயர்போனவர்தான்.இவர் பொழுதுபோக்கே சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏதாவது கருத்து ஒன்றை பதிவுசெய்து அதை சர்ச்சையாக மாற்றுவதே இவர்  வேலை ஆகும்.பின்னர் இதனால் பல்வேறு கருத்து யுத்தங்கள் நடைபெறும்.இதில் பல்வேறு கருத்துகள் பகிரங்கமாக பகிரப்படும்.இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தற்போது மீண்டும் ஒரு சர்சைக்குரிய கருத்தை கூறி இளைஞரிடம் கருத்து யுத்தம் நடத்தியுள்ளார். அதாவது ஹெச் .ராஜா பேஸ்புக்கில்  பதிவிட்டுள்ள கருத்து என்னவென்றால்,”திரிபுரா  முதல்வர் மாணிக்சர்கார் ஊழல்வாதி என்றும்  இடதுசாரிகள் … Read more

இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் … Read more

எட்டு திரைபிரபலங்கள் வெளியிடும் ‘8’ படத்தின் முதல் பார்வை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற போராடி கொண்டிருக்கும் ஹீரோ பரத். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக காளிதாஸ் என்ற படம் ரெடியாகி வருகிறது. இதனை தொடர்ந்து பரத்தும், காமெடி நடிகர் சூரியும் இணைந்து நடிக்கும் திரைப்பபடம் ‘8’ (எட்டு) இப்படத்தை விஜய் கவிராஜ் என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பூஜா ஜவேரி என்பவர் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.ஜான் பீட்டர் இசைய. செவிலோராஜா ஒளிப்பதிவு … Read more