2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை! முழுமையான கடைசி பட்ஜெட்….

நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்  மத்திய  நிதியமைச்சர் அருண்ஜெட்லி . பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார். ஜிஎஸ்டி முறை மூலம் மறைமுக வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது மே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது அடிப்படையான பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது 8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக … Read more

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை !

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 965 புள்ளிகளுடன் வர்த்தக முடிந்த நிலையில் இன்று 80 புள்ளிகளுக்கும் அதிக உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 151 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று நிஃப்டி நேற்று 11 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி அதிகபட்சமாக 11 ஆயிரத்து 100 புள்ளிகளைத் தொட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் … Read more

கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…!!

கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல் வளத்தை பாதுகாப்பதிலும் கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் அடைகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்த அதிரடியில் களம் இறங்கும் கமல் !இளைஞர்கள்தாம் என் தலைவர்கள்…..

நடிகர் கமல்ஹாசன்  வருகிற 21ஆம் தேதி முதல் தாம் நடத்த இருக்கும் கூட்டங்கள் ஒருவழிப்பாதையாக தாம் மட்டும் பேசுவதாக இருக்காது என்றும், பெரியார் பாணியில் கலந்துரையாடல்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பிரபல வார இதழில் தாம் எழுதி வரும் தொடரில் இதனைத் தெரியப்படுத்தியுள்ள அவர், சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.தாம் இந்து விரோதியல்ல என்றும் … Read more

மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்!மாணவர்களுக்கு எச்சரிக்கை …

ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் சென்னை மின்சார ரெயிலில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்று ரகளையில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பட்டாக்கத்திகளை உரசிக்கொண்டு சென்ற 9 மாணவர்கள் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வருங்காலத்தில் பாஸ்போர்ட், மற்றும் காவல்துறையின் நன்னடத்தை சான்று வழங்கப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கெத்து காட்டுவதாக நினைத்து பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் … Read more

இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள்…!!

இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள் – பிப்ரவரி 1, 2003 அன்று விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது இறந்தார் கல்பனா சாவ்லா (Kalpana Chawla, . இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த இவர். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு குடியுரிமை வாங்கியவர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு STS-107 என்ற கொலம்பியா … Read more

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் “வர்மா” படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்…!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கிற்கு வசனம் எழுதப்போவது ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் தான் என்ற தகவல் மட்டும் … Read more

டெல்லி விமானப் படையின் குரூப் கேப்டன் அதிரடியாக கைது!ஐ.எஸ். தீவிரவாதியா ?

வாட்ஸ் ஆப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு  விமானப்படையின் ரகசியங்களைப் படமெடுத்து அனுப்ப முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த குரூப் கேப்டனான அவரை விமானப்படையின் உளவுப்பிரிவினர் கண்காணித்ததில் அவர் சிக்கினார். தான் காதலிக்கும் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த அதிகாரி ரகசிய தகவல்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண், விமானப்படை அதிகாரியை மயக்கி ரகசியங்களைப் பெறுவதற்காக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பி … Read more

ஷார்ஜா வாரியர்ஸ் , துபாய் ஸ்டார் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் மேட்ச் பிக்சிங்! தொடரும் அவலம் …..

ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கும், துபாய் ஸ்டார் அணிக்கும் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் கடுமையான மேட்ச் பிக்சிங் இருப்பதாக எழுந்த ஐயத்தில் யுஏஇ-யில் ஆல்டைம் அஜ்மன் லீக் என்ற தனியார் லீக் போட்டியில்   ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியுள்ளது. கன்னாபின்னாவென்று வீரர்கள் ரன் அவுட் ஆவதும் ஸ்டம்பிங் ஆவதும் தாறுமாறாக ரன்களுக்கு ஓடுவதும் அடங்கிய இந்தப் போட்டியின் வீடியோ வைரலாக ஐசிசி உஷாரானது. மைதான அதிகாரிகளே அஜ்மன் ஓவல் மைதானத்தில் இனி போட்டி நடக்கக் கூடாது … Read more

தந்தை, மகன் நடித்த ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘மிஸ்டர். சந்திரமௌலி’. இப்படத்தின் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ந் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.