#Breaking:தமிழை பயிற்று மொழியாக்க இயலாது – மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும்,பயிற்று மொழியாக்கவும் கோரிய கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை … Read more

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் – கமலஹாசன்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என கமலஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்றும் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் … Read more

தமிழ்மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது-பிரதமர் மோடி..!

தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது என்று பிரதமர் மோடி இன்று மங் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அபிமானி நான் என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் சீக்கிய குரு தமிழ் மொழி குறித்து பெருமையாக … Read more

COWIN செயலியில் தமிழை தவிர்த்து நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்ப்பு…!

கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்த நிலையில், 9 பிராந்திய மொழிகள் நீக்கம். இன்று (ஜூன் 6) நீக்கப்பட்ட 9 பிராந்திய மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள … Read more

குட் நியூஸ்..!இனி தமிழ் மொழியில் BE படிக்கலாம்..!

வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை … Read more

“உலக மொழிகளில் மிக தொன்மையான மொழி தமிழ்”- பிரதமர் மோடி உரை!

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரதமர்மோடி உரையாற்றி வரும் நிலையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என கூறினார். பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அப்பொழுது அவர் பேசுகையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி … Read more

பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை – ஓபிஎஸ்!

மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை என துணை முதல்வர் கூறியுள்ளார். இன்று சென்னையில் பிரான்ஸ் ஓரயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் இணையதளம் மூலமாக முத்தமிழ் விழா 2020 எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருடன் பிரான்ஸ் தமிழ் கலாச்சார … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த “தமிழ்”

அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டியில் வாக்குச் சீட்டை எங்கே போட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு, தமிழில் பதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை … Read more

இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு. மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்க்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து,  மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர்  மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக … Read more

பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான 1948ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகள் முறையே 1983 மற்றும் 1984ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாகவும், ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்கவேண்டும் என்றும், இந்த … Read more