“உலக மொழிகளில் மிக தொன்மையான மொழி தமிழ்”- பிரதமர் மோடி உரை!

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரதமர்மோடி உரையாற்றி வரும் நிலையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என கூறினார்.

பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அப்பொழுது அவர் பேசுகையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என உரையாற்றினார்.

மேலும் பேசிய அவர், அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என கூறினார். அதுமட்டுமின்றி, கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.