ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல்!

senthil balaji

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத … Read more

லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

lyca productions

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன்  23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார்.  இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான … Read more

அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்.!

Mansoor-Ali-Khan-2

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் … Read more

பிப்ரவரியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம்.!

Dhruva Natchathiram - Madras HC

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017 ஆண்டுக  எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக இப்படம் கடந்த ஆண்டு … Read more

ஆபாச படங்களை தனிநபர் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

porn videos

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செல்போனில் குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

தப்பித்தார் பொன்முடி.! சரணடைவதில் இருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்.! 

Supreme court of India - Ponmudi

கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 3 … Read more

3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.! 

Supreme court of India - Ponmudi

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் … Read more

அயலான் படத்திற்கான இடைக்கால தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்!

chennai high court

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் நாளை ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்று காலையில் இருந்தே படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என ஒரு குழப்பமான தகவல் ஒன்று வெளியாகி கொண்டு இருந்தது. அதற்கு காரணம் அயலான் திரைப்படத்தை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் கடனாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம்  … Read more

OPS தரப்பு வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை – இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

INBADURAI

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த … Read more

ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

o panneerselvam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு … Read more