மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

ponmudi

Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் … Read more

மீண்டும் உயர்கல்வித்துறை.. அவசர அவசரமாக அமைச்சராகும் பொன்முடி.?

Minister K Ponmudi

Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி. Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து … Read more

பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்…

K Ponmudi - Governor RN Ravi

Ponmudi Case : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குறிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், … Read more

3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.! 

Supreme court of India - Ponmudi

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் … Read more

தீர்ப்புக்கு பின் முக்கிய ஆலோசனை.! முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பொன்முடி.!

Ponmudi DMK -Tamilnadu CM MK Stalin

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையானது வழக்கு பதிவு செய்து இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நிரபராதி என தீர்ப்பளித்து இருந்த நிலையில், நேற்று அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான … Read more

அமைச்சர் பொன்முடி சிறை செல்ல தேவையில்லை… நீதிபதி உத்தரவு.!

Minister Ponmudi - Madras High court

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக  புகார் பதியப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த … Read more

Today Live : கனமழை பாதிப்பு.. பொன்முடி வழக்கு.. முதலமைச்சர் பயணம்…!

Today live 21 12 2023

வடதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த பின்னர், அடுத்து தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத சூழல் நிலவுகிறது . இரு மாவட்ட மக்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை  தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், … Read more

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

Madras high court - Minister Ponmudi

தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது  ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி … Read more

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!

ponmudi

கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த சூழலில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூலை மாதம் … Read more

கல்லூரிகள் வளர்ச்சிக்காக 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.! அமைச்சர் பொன்முடி தகவல்.!

தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். – உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல். சென்னையில், கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களோடு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘ மாதம் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். … Read more