லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

lyca productions

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன்  23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார்.  இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான … Read more

விஷால் வழக்கு – லைகா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.!

vishal

லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த … Read more

விஜய் மகன் சஞ்சய் செய்த செயலால் கடுப்பான லைக்கா! படம் ஆரம்பிக்கும் போதே இப்படியா?

Jason Sanjay

தமிழ் சினிமாவில்  நடிகர் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் அந்த திரைப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், சஞ்சய் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக எந்த நடிகர் நடிக்க போகிறார் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால், இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் … Read more

அனல் பறக்கும் ப்ரோமோஷன்…விண்ணில் பறக்கும் ‘துணிவு’… வியக்க வைக்கும் வீடியோ.!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்கிறார். படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிமாநிலங்களில் லைக்கா நிறுவனமும் திரையரங்குகளில் வாங்கி வெளியீடுகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. இதையும் படியுங்களேன்- வாரிசு Vibe-ல் ராஷ்மிகா மந்தனா….கவர்ச்சி … Read more

வெளியான பிரமாண்ட அறிவிப்பு.! சொந்த மகள் இயக்கத்தில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார்.! அதிரடி அப்டேட்….

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்காக கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, படத்தில் ஒரு சிறிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். … Read more

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், … Read more

டான் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது. … Read more

டான் திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் … Read more

டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..?! காரணம் என்ன தெரியுமா..??

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும்  … Read more

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜெயம்ரவி காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த … Read more