ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல்!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..!

இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மூன்று முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரப்பட்ட நிலையில், அப்போது மறுப்பு தெரிவித்த நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

அதாவது, கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி சமீபத்தில், 3வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்