தப்பித்தார் பொன்முடி.! சரணடைவதில் இருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்.! 

கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.! 

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை செய்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யபடுவதாகவும், அமைச்சராக பொன்முடி இருந்த காலக்கட்டத்தில் அவர் 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அதன்பிறகு, டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எதுவாக, சரணடைய 30 நாட்கள் காலஅவகாசம் அளிப்பதாகவும் அதனை மீறினால் காவல்துறைனர் கைது செய்யவும் தீர்ப்பில் குறிப்பிடபட்டு இருந்தது.

இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என இன்று உச்சநீதிமன்ற தனிநீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர், தனி நீதிபதி அமர்வு, இந்த மேல்முறையிடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்து, தற்போது பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்டுகிறது என்றும் , இந்த விலக்கு தொடருமா என்பது மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கூறுவார்கள் என தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் மேல்முறையீடு மனு விசாரணை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.