குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம்.!

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

வருகின்ற 26ஆம் தேதி  நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியக் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.