குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம்.!

Gram Sabha meeting TN

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் … Read more

கிராமசபை போல நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடத்தப்படும்.! – தமிழக அரசு அறிவிப்பு.!

கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவது போல நகர சபை கூட்டங்கள், மாநகர சபை கூட்டங்கள் மக்களால் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் … Read more

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்வு..! மநீம வரவேற்பு..!

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தியதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.  கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் … Read more