ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

o panneerselvam

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக … Read more

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

Madras High Court

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன்  பேச்சுவார்த்தையை  கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து … Read more

Bus Strike : பண்டிகைக்கால ஸ்ட்ரைக் முறையற்றது.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

chennai high court

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, … Read more

தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்  டெபாசிட் செய்ய வேண்டும், சட்டமன்ற தேர்தலாக இருந்தால்  வேட்பாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்  டெபாசிட் செய்ய வேண்டும். அதுவே பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்த தொகைகளில் பாதியை டெபாசிட் செய்ய வேண்டும். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பல ஆண்டுகளாக டெபாசிட் செய்யும் தொகை உயர்த்தப்படவில்லை,  தேர்தலுக்கு கோடிக்கணக்கில் … Read more

விஷால் வழக்கு – லைகா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.!

vishal

லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த … Read more

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!

mansoor ali khan

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் … Read more

அமைச்சர் பொன்முடி சிறை செல்ல தேவையில்லை… நீதிபதி உத்தரவு.!

Minister Ponmudi - Madras High court

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக  புகார் பதியப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த … Read more

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

Madras high court - Minister Ponmudi

தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது  ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி … Read more

ஆலம்பனா படத்தை ஒத்திவைத்த நிறுவனம்! அப்போ அயலான் கதி?

ayalaan

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா”  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், இன்று “ஆலம்பனா”  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி … Read more

‘அயலான்’ படத்திற்கு வந்த சிக்கல்.! சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்.!

Aalambana - Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 2 படங்களையும் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சுமுக முடிவை எட்டும் என … Read more