அமைச்சர் பொன்முடி சிறை செல்ல தேவையில்லை… நீதிபதி உத்தரவு.!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக  புகார் பதியப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரையும் விடுதலை செய்யபட்டு தீர்ப்பு வெளியானது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் , பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இன்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை பெற்ற காரணத்தால், பொன்முடி வகித்து வந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ஆகியவற்றை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து அவர் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எதுவாக 30 நாட்கள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதவிட்டனர். இதனால் இப்போதைக்கு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சிறை செல்ல வேண்டியதில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.