அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்.!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷா குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

இத்துடன் இந்த விவகாரம் முடிந்தது என்று பார்த்தால், அதன்பிறகு தான் அளித்த அந்த பேட்டியை முழுதாக பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விட்டனர்.

இதனால், திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் தலா 1 கோடி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை நிதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதாவதும, பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு, அதை அவதூறாக கருத முடியாது என கூறி தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!

இந்த நிலையில், மானநஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதனை செலுத்த 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவர் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்  அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.