Today's Live : இபிஎஸ்-ஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது..! ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு..!

Apr 13, 2023 - 05:02
 0  1

ஓபிஎஸ் மனு :

இபிஎஸ்-ஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார். அவர் சார்பாக புகழேந்தி இந்த மனுவை அளித்தார். இபிஎஸ் தன்னை பொது செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 13.04.2023 4:30 PM

உ.பி.யில் என்கவுன்டர் :

மாஃபியாவில் இருந்து அரசியல்வாதியாக மாறிய அதிக் அகமதுவின் மகனான ஆசாத்தை உ.பி காவல்துறை என்கவுன்டர் செய்தது. பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜுபால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பாலை, ஆசாத் மற்றும் குலாம் சுட்டுக் கொலை செய்ததாக போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ஆசாத் மற்றும் குலாமை போலீசார் என்கவுன்டர் செய்தது குறித்து உமேஷ் பாலின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

13.04.2023 4:00 PM

தடையை வென்ற ருத்ரன் :

நடிகர் ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படாது என்று ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் பதிலளித்த நிலையில், தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.

13.04.2023 3:30 PM

உரிமம் ரத்து :

போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய மற்றும் மாநில குழுக்கள் ஆய்வு நடத்தின. இந்த திடீர் சோதனையில் ஜிஎம்பி (GMP) வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

13.04.2023 2:15 PM

அரசியலில் விஜய் :

விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் 10க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் பிறந்தநாளான நாளை அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும்படி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற. சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

13.04.2023 1:30 PM

ஐபிஎல் 2023 :

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றதாக 24 பேரை சென்னை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட 24 பேரிடம் இருந்து 62 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.65,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

13.04.2023 12:30 PM

மியான்மர் இராணுவ வான்வழித் தாக்குதல்:

மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தின் மீது இராணுவ ஆட்சிக்குழு நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 133 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20 குழந்தைகளும் அடங்குவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

13.04.2023 11:45 PM

71,000 பேருக்கு பணி ஆணை :

ரோஜ்கர் மேளா திட்டத்தில் 3வது கட்டமாக 71,000 பேருக்கு இன்று பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். ரயில் மேலாளர் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு தேர்வானோருக்கு காணொளியில் ஆணைகளை வழங்குகிறார்.

13.04.2023 10:30 AM

தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது :

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்தியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது, தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

13.04.2023 10:10 AM

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow