சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 … Read more

ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!இந்திய நீர்நிலைகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிப் போகும் அபாயம்….!

ஆய்வில் , இந்தியாவில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் முற்றிலுமாக வறண்டு போகும் அபாயம் நெருங்கியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.நீர்நிலைகளின் தண்ணீர் அளவு உலக அளவில்  குறித்த ஆய்வு செயற்கைக்கோள்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சர்வதேச அளவில் 5 லட்சம் அணைகளில் தண்ணீர் அளவு அதிவேகமாக வற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு ‘டே ஜீரோ’ என்ற தண்ணீரே இல்லாத அளவுக்கு பஞ்சம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம், தண்ணீரை … Read more

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை …! மக்கள் மகிழ்ச்சி…!

பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான … Read more

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு…!சென்னை  வானிலை ஆய்வு  மையம் …!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று  சென்னை  வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  குமரி முதல் தெற்கு கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது . வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு என்றும்  சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் …!ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு……

நேற்று சிலி நாட்டின் மத்தியப் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பூமியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துறைமுக நகரமான கோகுயிம்போ ((Coquimbo)) பாதிக்கப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடி ,ராமநாதபுரம் பகுதிகளில் மழை…!

தமிழகத்தில்  தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேராவூர், காட்டூரணி, பட்டினம்காத்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் தொடர்ந்து கோடைவெயில் தகித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் … Read more

ஆலங்கட்டி மழையால் அமெரிக்காவில் கொண்டாட்டம் …!

ஆலங்கட்டி மழை  அமெரிக்காவின் டெக்சாஸில் பெய்தது. கடந்த வெள்ளியன்று டெக்சாஸின் வடக்குப் பகுதியில் மழைத்துளியுடன் பெய்த ஆலங்கட்டிகளைக் கையில் அள்ளி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். சற்று பெரியளவில் பெய்த ஆலங்கட்டிகள்  நகரைச் சுத்தமாக்கிவிட்டதாகவும் இளைஞர்கள் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டெல்லியில் காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி….!

காலை நேரத்தில் டெல்லியில்  திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் கடும் வெயில் கொளுத்திவருகிறது. இதனால், வெப்பத்தை தணிக்க மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடும் வெயில் கொளுத்திய நிலையில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் உணவுப் பற்றாக்குறை ….!உலகிற்கு கடும் எச்சரிக்கை …!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால்  உணவுப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள எக்செட்டர் பல்கலைக்கழகமானது, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 122 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில், பருவ நிலை மாற்றத்தால் உலக அளவிலான உணவுப் பாதுகாப்பில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையில், பருவ நிலை மாற்றத்தால் மழை பொய்த்தல் மற்றும் கடும் வறட்சி ஏற்பட்டு, பல்வேறு வகையிலான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் …! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்  காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.