7.5% இடஒதுக்கீடு: கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார் முதல்வர். மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அரசு பள்ளி … Read more

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று ஆலோசனை கூட்டம்!

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக மாணவர்கள் … Read more

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகையில் அச்சத்தை ஏற்படுத்த கூடாது – அமைச்சர் மா. சுப்பிரமணியம்!

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகையில், கொரோனா குறித்து அச்சத்தை ஏற்படுத்த கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரக்கூடிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், தற்போது தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக … Read more

“மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்…!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த 14-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சிலர் முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் எனவும் சிலர் 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என … Read more

“திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்தி;உண்மை நிலையை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்” – எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்..!

திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்தி;நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது.அதன்படி, இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கிடையில்,தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி … Read more

வகுப்பறையில் விசில் அடித்த 40 மாணவர்களுக்கு பிரம்படி – 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் தோஹானா எனும் பகுதியில் உள்ள, அரசு பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் வகுப்பறையில் வைத்து விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசில் அடித்த மாணவர்கள் அனைவரையும், அவர்களது பெற்றோர்களை வரவழைத்து வருமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் வந்திருந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் … Read more

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கோவையில், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் … Read more

தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் – அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் தகவல். கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த அனைத்து கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ள கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது. இதில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும். … Read more

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த கூடாது – மணீஷ் சிசோடியா!

பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி மாணவர்களை பள்ளிக்கு வர சொல்ல கூடாது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது போல தலைநகர் டெல்லியிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக … Read more

“அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் இன்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு, அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், … Read more