இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!

coronavirus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் … Read more

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம். மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா … Read more

#BREAKING: மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து – மத்திய அரசு ஒப்புதல்!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல். மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. புதிய வகை கொரோனா மீண்டும் பரவி … Read more

#BREAKING: இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி – அனுமதி அளித்தது மத்திய அரசு!

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி. மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் வகையில் நவீன கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. பிபிவி 154 என்ற பெயர் கொண்ட தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. … Read more

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில்!

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில்  கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் … Read more

#BREAKING: Corbevax பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

18 வயது மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல். கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக … Read more

தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் … Read more

#Alert:தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும்  சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு … Read more

மக்களே ரெடியா…1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது.உத்தரபிரதேசம்,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.இதில்,தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில்,பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், … Read more

#Breaking:கடந்த ஒரே நாளில் 2,259 பேருக்கு கொரோனா;20 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,364 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,259 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 10 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் … Read more