கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கோவையில், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் துவங்கிய செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத நிலையில் பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சுத்தம் செய்வதற்காக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.