அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!

mk stalin

MK Stalin: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் எனவும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். கடந்த அதிமுக … Read more

இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tamilnadu goverment

ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என்று கடந்த மாதம் சிறுமான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் … Read more

இந்த இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிடமாற்றம் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை

DPI

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரையில், அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பின், அவர் மற்ற இடத்திற்கு பணிமாற்றம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை தான் தொடர்ந்து காணப்படுகிது. இந்த நிலையில், வட மாவட்டங்களை பொறுத்தவரையில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க … Read more

போராட்டம் தொடரும்! இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு. சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் … Read more

உண்ணாவிரத போராட்டம் – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என டிடிவி ட்வீட்.  சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னும், பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி … Read more

இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது – அண்ணாமலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு என அண்ணாமலை ட்வீட்.  ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி … Read more

LGBTQIA குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி – தமிழக அரசு

மருவிய பாலினத்தவர் மற்றும் எல்ஜிபிடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி. LGBTQIA மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றமதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கொள்கை இன்னும் 3 மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் எனவும் … Read more

ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க உத்தரவு!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால் சுமார் 20,000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் … Read more

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – நீதிமன்றம்

ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள். எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் … Read more

ரூ.5,000 தொகுப்பூதியத்தில் LKG, UKG-க்கு ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.