#Breaking:ஜன.10 ஆம் தேதி முதல்…ரயிலில் பயணிக்க இவை கட்டாயம்;இல்லையென்றால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை:ஜன.10 ஆம் தேதி முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. … Read more

இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் மேம்பாலம் பணிகள் நிறைவடைத்தை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தூண்களில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு பிறகு மேம்பாலத்தில் ரயில் ஓட தொடங்கியது. இன்ஜின், சரக்கு ரயிலை தொடர்ந்து முதல் பயணிகள் ரயிலாக சென்னை – திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது. விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலம் … Read more

முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் – தெற்கு ரயில்வே

ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னையாற்றில் … Read more

543 ரயில் நிலையங்களில் “Wi-Fi” வசதி – தெற்கு ரயில்வே

ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi வசதி விரைவில் அறிமுகம். தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம். அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, … Read more

சென்னை – திருப்பதி விரைவு ரயில் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை – திருப்பதி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.15க்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதியில் இருந்து காலை 6.45 புறப்பட்ட சென்னை விரைவு ரயில் பயணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நிலச்சரிவு – 3 முக்கிய ரயில்கள் ரத்து.. 8 ரயில்கள் சேவையில் மாற்றம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் சேவைகள் ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக 3 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 8 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் – கன்னியாகுமரி – நாகர்கோவில் ரயில் (06426) இன்று இரு … Read more

கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் – தெற்கு ரயில்வே கோரிக்கை!

தனித்தனியாக அழைக்க கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் என தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சென்னை முதல் திருவள்ளூருக்கு இடைப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும், ரயில் போக்குவரத்திற்கான நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அவசர உதவிக்கான ஹெல்ப்லைன் எண்கள் அறிவித்திருந்தது. … Read more

#Breaking Alert ! சென்னை to திருவள்ளூர் புறநகர் ரயில்சேவை பாதிப்பு -தெற்கு ரயில்வே

சென்னை – திருவள்ளூர் க்கு இடையேயான புறநகர் ரயில்சேவை தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆவடி மற்றும் அம்பத்தூரில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எம்ஏஎஸ்-ல் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூர் – கொருக்குப்பேட்டை இடையே கனமழை பெய்து வருவதால் வடக்கு பகுதியில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கிய அனைத்து சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும். நாங்கள் … Read more

அதிர்ச்சி..தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்;ரயில்வே உத்தரவை ரத்து செய்க – எம்பி சு.வெங்கடேசன் கடிதம்..!

சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்த இந்திய ரயில்வேயின் உத்தரவை ரயில்வே அமைச்சர்  ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் … Read more

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் -தெற்கு ரயில்வே

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவைகள் தொடங்குகிறது. அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்களுக்கு ரயிலில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more