ரத்து செய்யப்பட்ட ராக்போர்ட் உள்ளிட்ட ரயில்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட ராக்போர்ட், உழவன் உள்ளிட்ட ரயில்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் பயணிகளின் எண்ணிக்கை  குறைந்தததால் பல சிறப்பு ரயில்கள் மே மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், … Read more

சிறப்பு ரயில்கள் ரத்து.., தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் குறைவு காரணமாக மே 06 முதல் மே 15 வரை ஆகிய 10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து தினமும் இரவு 7.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் தினசரி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் காலை 11:35 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சேவையும் … Read more

கொரோனா அச்சம்.., 12 சிறப்பு ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கொரோனா காரணமாக 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம்- குமரி வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மே 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. குமரி- ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் ஞாயிறு, … Read more

சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயங்கும்- தெற்கு ரயில்வே!

சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து, அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் … Read more

புரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது இன்று மதியம் பாம்பன் பகுதியை கடந்து பின்னர் மேற்கு -தென்-மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு … Read more

சென்னை- கோவை சதாப்தி ரயில் சேவை நிறுத்தம்.. ரயில்வே அறிவிப்பு.!

சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் சேவை பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயியின் கடைசி சேவையாக இருக்கும். டிசம்பர் 01-ஆம் தேதி முதல் சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை எம் ஜி ஆர் செண்ட்ரல் – புதுடில்லி தினசரி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. கொச்சுவேலி (கேரளா) – ஸ்ரீ கங்கா நகர் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 21 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி இடையே வாரமிருமுறை சிறப்பு ரயில்  வரும் 25 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை … Read more

சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்

இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் இருந்து தஞ்சாவூர்,திருச்சி,கொல்கத்தாவிற்கு தினசரி சிறப்பு ரயில் அக்.,26முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு…

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுகள் வரும்  24-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். பின், கொல்லத்திலிருந்து அக்டோபர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு … Read more

சிறப்பு ரயில்கள் இயக்கம்…விவரம் உள்ளே

இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.