நாளை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை எம் ஜி ஆர் செண்ட்ரல் – புதுடில்லி தினசரி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. கொச்சுவேலி (கேரளா) – ஸ்ரீ கங்கா நகர் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 21 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது.

கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி இடையே
வாரமிருமுறை சிறப்பு ரயில்  வரும் 25 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. எர்ணாகுளம் – பாட்னா – எர்ணாகுளம் இடையே வாரமிருமுறை சிறப்பு ரயில் வரும் 23-ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author avatar
murugan

Leave a Comment