543 ரயில் நிலையங்களில் “Wi-Fi” வசதி – தெற்கு ரயில்வே

ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi வசதி விரைவில் அறிமுகம்.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம்.

அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கீ.மீ தூரத்துக்கு கண்ணாயிழை கேபிள் தொடர்பு அமைப்பு என்றும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்