#Breaking:ஜன.10 ஆம் தேதி முதல்…ரயிலில் பயணிக்க இவை கட்டாயம்;இல்லையென்றால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை:ஜன.10 ஆம் தேதி முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் எனவும்,இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் புறநகர் மின்ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.