சுதந்திர இந்தியாவிற்கு இப்போதுதான் விடியல் பிறந்துள்ளது! நடிகர் தனுஷின் தந்தை புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி, சென்ற செப்டம்பர் 17ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் கோயம்பத்தூரில் தமிழக பாஜக கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் தனியார் கல்லூரியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா மற்றும் நடிகர் தனஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன். … Read more

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! சிறப்பு தபால்தலை வெளியிட்டு ஐ.நா கௌரவம்!

காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில் புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு, ஐநா சபையில் ஒரு புதிய பூங்காவையும் உருவாக்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அங்கு மகாத்மா காந்தி உருவப்படம் பொறித்த சிறப்பு தபால்தலை … Read more

களைகட்டிய ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி! பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி!

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 7 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி எனும் நிகழ்ச்சி இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குஜராத் பாரம்பரிய நடனமான தாண்டியா நடனம் மூலம் பிரமாண்ட வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. … Read more

பிரதமர் மோடி சென்ற விமானம் எந்திர கோளாறு காரணமாக பாதியில் தரையிறக்கம்!

பிரதமர் மோடி 7 நாள் அரசியல் முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, அமெரிக்கவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் ஹவ்டி மோடி எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார். இந்நிகழ்ச்சி, அமெரிக்கா டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் அமெரிக்க செல்வதற்காக மோடி சென்ற விமானம் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனி நாட்டில் தரையிறக்கப்பட்டது. அங்கு ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு … Read more

கார்ப்பரேட் வரி குறைப்பினால் முதலீடு அதிகரிக்கும்! வேலைவாய்ப்புகள் உருவாகும்! பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்குவதற்கு இந்த வரி குறைப்பு வழிவகை செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான கருத்துக்களை … Read more

அயோத்தியில் ராமர் கோவில்! சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக … Read more

பிரதமர் மோடியை தொடர்ந்து, அமித்ஷாவையும் நேரில் சந்தித்தார் மம்தா பேனர்ஜி!

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்த பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடியும், மம்தாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இருவருக்குள் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றக்கோரியும், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் … Read more

பிரதமர் மோடியின் வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘கர்மயோகி’ அப்டேட்ஸ்!

பாலிவுட்டில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்களை எடுத்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படம் பிரதமர் மோடியின் இளமைக்கால வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். இந்தப் படம் தமிழிலும் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு தமிழில் கர்மயோகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதமர் மோடியின் இளமைக் கால முக்கிய நிகழ்வுகள் படமாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. … Read more

நீங்கள் ஏன் பிரதமராகக்கூடாது ?டிப்ஸ் கேட்டமாணவரிடம் நச்சுனு கேள்வி கேட்ட பிரதமர் மோடி

டிப்ஸ் கேட்ட மாணவர் ஒருவருக்கு  பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதன் முக்கிய பணியான நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த அறிய நிகழ்வை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.பிரதமருடன் நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி  நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சந்திராயன் … Read more

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி-பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நீண்ட விவாதத்திற்கு பிறகு நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியது. இந்த நிலையில்  முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் வலிமைக்கு தலை வணங்குகிறேன் .முத்தலாக் தடை … Read more