மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! சிறப்பு தபால்தலை வெளியிட்டு ஐ.நா கௌரவம்!

காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில் புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு, ஐநா சபையில் ஒரு புதிய பூங்காவையும் உருவாக்கியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அங்கு மகாத்மா காந்தி உருவப்படம் பொறித்த சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது. மேலும், ஐநா சபையில் சூரிய காந்தி பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இந்த பூங்காவை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர், தென்கொரிய அதிபர் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த பூங்காவை திறந்து வைத்தனர்.

இந்த அக்கூட்டத்திற்கு  சமகால உலகில் காந்தியடிகளின் பங்களிப்பு என்ற தலைப்பு வைக்கப்பட்டது. அதன்படி இந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி, காந்தியடிகளுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவும் அதற்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார். மேலும், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் கருத்துகள் காந்தியின் தரத்திலிருந்து வடிவம் பெற்றதாக குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.